தமிழகத்தில் அதிமுக கட்சி ஹாட்ரிக் சாதனையாக ஆட்சி அமைக்கும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் அதிமுக கட்சி ஹாட்ரிக் சாதனையாக ஆட்சி அமைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், புதுக்கோட்டையில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசியதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் நடத்தும் பிரச்சாரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதாகவும், மக்கள் விரும்பும் ஆட்சியாக அதிமுக ஆட்சி அமைந்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும், கொரோனாவை கட்டுப்படுத்த சிறந்த முயற்சிகளையும் அதிமுக அரசு சிறப்பாக செய்தது.

Read more – மதுரையில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை : தனிக்கட்சி தொடங்குகிறாரா ?

மேலும், பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கியதையும், 2000 மினி கிளினிக் என அனைத்தும் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, தமிழகத்தில் அதிமுக கட்சி ஹாட்ரிக் சாதனையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

Exit mobile version