நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சி :

திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கி இரண்டாம் நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதனை நேரில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வுக்கு பின்னர் தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :  

மருத்துவத்துறை சார்ந்தவர் என்ற அடிப்படையில் தானும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.நோய் தடுப்புக்கான முக்கிய மைல்கல் தடுப்பூசி என்றும், இதுவரை 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உட்பட 3,226 மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மூன்றாவது கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் எனக்கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட எவருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்

Exit mobile version