சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது .
சென்னை :
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்தநிலையில் கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுதாங்கல், திருமங்கலம், பெரம்பூர், அண்ணாநகர்,அம்பத்தூர், திருவான்மியூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
Read more – டெல்லி விவசாய போராட்டம் : 7 ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி, கொட்டும் மழையில் அவதிப்படும் விவசாயிகள்
இந்த மழையின் காரணமாக சென்னை மவுண்ட் ரோடு, கிண்டி அண்ணா பல்கலைக்கழக சாலை போன்ற முக்கிய சாலைகள் முடங்கின. மேலும், தாழ்வான பகுதி மற்றும் சாலைகளில் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசனிடம் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே மழை பெய்கிறது, மேலும் சென்னை பொறுத்தவரை நாளை மற்றும் அதற்கு மறுநாள் மழை தொடரும் என்று தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருகிற 11 மற்றும் 12 ம்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, மதுரை மற்றும் கோவை போன்ற மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.