சென்னை தண்டையார்பேட்டையில் பரபரப்பு

சென்னை தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை  கொருக்குப்பேட்டை தமிழர் நகரை சேர்ந்தவர் லோகநாதன் வயது(40) கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில்  தனது இரு சக்கர  வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். E.C.S பள்ளி அருகே சென்று கொண்டு இருந்த டேங்கர் லாரியை முந்தும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த லோகநாதன் மீது   பின்னால் வந்த டேங்கர் லாரியின் சக்கரம் இடது கால் தொடையில் ஏறி இறங்கியது. அலறல் சத்தம் கேட்டு லாரியை  நிறுத்திய ஒட்டுனர்,  உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு  தகவல் தெரிவித்தார். பின்,

லோகநாதன் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 25 வயதுடைய லாரி டிரைவர் கிஷோர் குமாரை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர் . இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version