ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் நம் நாட்டின் எதிரிகள்: முதல்வர் ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் நம் நாட்டின் எதிரிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மலையாள செய்தி ஊடகமான மனோரமா ‘கான்க்ளேவ் 2022’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரடியாக பங்கேற்ற நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார்.

விழாவில் அவர் பேசியதாவது: கொரோனா தொற்று காரணமாக நேரடியாக பங்கேற்க முடியவில்லை. இந்தியா மேலும் வலிமையோடு இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பதே, நாட்டை காப்பதாக அர்த்தம். தமிழ்,மலையாளம் இரு மொழிகளுக்கும் இடையே ஆழமான உறவு இருக்கிறது.

மாநில அரசுகள் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலை. திமுக தலைமையிலான கூட்டணியானது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி. ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள்.இந்தியாவிற்கு ஒரு தேசியமொழி என்பது சாத்தியமில்லை. இந்தியாவில் பல மொழி பேசும் பல கலாசாரத்தை பின்பற்றும் மக்கள் உள்ளனர் என்றார். மேலும், முதல்வர் ஸ்டாலின் இந்த உரையை மலையாள மொழியில் நிகழ்த்தினார்.

Exit mobile version