SeithiAlai

பாட்டியிடம் முத்தம் கொடுக்கச் சொல்லி டார்ச்சர் மாதையன் செய்த வெறிச்செயல்

பாட்டியிடம் முத்தம் கொடுக்க சொல்லி இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

உதிரும் ரத்தம்; உயிரூட்டும் உத்தமம் இன்று உலக ரத்த தான தினம் | Dinamalar  Tamil News

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதுமையான பெண்களும் இந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவது விதிவிலக்கல்ல என்பதுபோல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவர் குடிக்கு அடிமையானவர். எந்நேரமும் போதையில்தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, போதை தலைக்கேறிய நிலையில் தெருவில் வந்த சாந்தா பாட்டியை வம்புக்கு இழுத்து முத்தம் கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அவர்  திட்டியதோடு மட்டுமல்லாமல் முத்தம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த மாதையன் அருகில் இருந்த இரும்புக்கம்பியால் அவரை தாக்கியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின் வழக்குப்பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார் மாதையனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version