மாலை நேர உழவர் சந்தைகள் ஆகஸ்டு 12ல் முதல்வர் ஸ்டாலின் திறப்பு

மாலை நேர உழவர் சந்தைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 12ம் தேதி திறந்து வைக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த உழவர் சந்தைகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.பாழடைந்து கிடந்து உழவர் சந்தைகள் எல்லாம் மீண்டும் புதுப்பொலிவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட்டு வருகிறது.

இதேபோல் மாலை நேரத்தில் உழவர் சந்தைகள் செயல்படும் விதமாக மாவட்டத்திற்கு 1 வீதம் 37 மாவட்டங்களிலும் உழவர் சந்தைகளை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை இந்த உழவர் சந்தைகள் செயல்படும். இதில் பயிறு வகைகள், சிறுதானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படும். இந்த மாலை நேர உழவர் சந்தைகள் அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், கரூர்,விழுப்புரம் ஆகிய ஊர்களில்  ஏற்கனவே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.மற்ற ஊர்களில் ஆகஸ்டு 12ம் தேதி திறக்கப்படவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை திறந்து வைக்க இருக்கிறார்.

Exit mobile version