SeithiAlai

ஆகஸ்டு 10ம் தேதி உணவுத் திருவிழா

திண்டுக்கல்லில் ஆகஸ்டு 10ம் தேதி உணவுத்திருவிழா நடைபெறுகிறது.

Top 12 Food Festivals in India That You Need on Your Bucket List

நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை ஒட்டி திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை சார்பில்  ‘அனைவருக்கும் சத்தான உணவு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

இதன் ஒருபகுதியாக, வரும் 10ம் தேதி காலை திண்டுக்கல் பி.வி.கே திருமண மண்டபத்தில்  உணவு திருவிழா நடத்தப்படுக்கிறது. இதில் திண்டுக்கல்லில் பிரபலமான பிரியாணி, கேக் வகைகள், பராம்பரிய உணவுகள் உள்பட பலவகை உணவுகள், செக்கு எண்ணெய் முதலானவை இடம்பெறுகின்றன. இதற்காக மொத்தம் 45 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும், மாலையில் சிந்தனை பட்டிமன்றம் நடைபெறுகிறது.

Exit mobile version