திமுக கட்சியை சேர்ந்த ஒப்பந்தக்காரர்களால் அரசுக்கு ₹1.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கரூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் திமுக கட்சியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் மேற்கொண்ட பணியினால் அரசுக்கு ₹1.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகின. கமிஷனில் குறியாக இருக்கும் இந்த திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யப் புத்தக விற்பனையாளர்களுக்குத் தகுந்த நஷ்ட ஈடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.