பணத்துக்காக அணி மாறுகின்றனர்: ஜெயக்குமார் காட்டம்

சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறுவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் தலைமையில் நடிகர் பாக்கியராஜ் இணைந்த நிலையில், சசிகலா, டிடிவி தினகரனை சந்திக்க உள்ளதாகவும், கட்சியில் அனைவரையும் ஒன்றினைக்கும் முயற்சியாக, தமிழ்நாடு முழுவதும் புரட்சிப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்திருந்தார். மேலும், பல அதிமுக எம்எல்ஏக்கள் என் பக்கம் வந்துள்ளனர். அவர்கள் யார் என்பது பரம ரகசியம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ்ஸை சந்தித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பணத்துக்காக ஆசைப்பட்டே சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறுகின்றனர். இதனால், அதிமுகவுக்கு எந்த பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

Exit mobile version