தற்கொலையில் தமிழ்நாடு 2வது இடம்

இந்தியாவில் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2ம் இடத்தை பிடித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தரும் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் ஒரே ஆண்டில் 1,64,000 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 18,925 பேர் கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது.

 தற்கொலை எதற்கு தீர்வாகாது அதுபோன்ற எண்ணம் ஏற்பட்டால் உடனே இந்த எண்ணிற்கு அழையுங்கள்.

Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours)

State suicide prevention helpline – 104 (24 hours)

iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm)

இமெயில்: help@snehaindia.org

மேலும், அந்த அறிக்கையின்படி, சாலை விபத்துகளில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை முதலிடத்தில் உள்ளது. பெருநகர எல்லைக்குள் 5,000 வாகன விபத்துகள் நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெறும் நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும், மகாராஷ்டிர மாநிலம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.3ம் இடத்தில் பெங்களூரு உள்ளது.

Exit mobile version