‘தாய்த்தமிழில் வழிபாடு வேண்டும்’ சமஸ்கிருதம் எதற்கு? சீமான் கொந்தளிப்பு

கடவுள் வழிபாடு மட்டும் ஏன் சமஸ்கிருதத்தில் செய்ய வேண்டும் என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழர் கோயில்களில் ‘தாய்தமிழில் வழிபாடு’ என்ற கொள்கையை முன்னெடுத்த சீமான் திருப்போரூர் முருகன் கோயிலில் இன்று தமிழில் வழிபாடு நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழுக்கு தாய்நாடு உள்ளது. சமஸ்கிருதத்திற்கு தனியே ஒரு மாவட்டமாவது உள்ளதா? என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், உலகில் மிக தொன்மையான மொழி தமிழ். சமஸ்கிருதம் பிறரால் திணிக்கப்பட்ட மொழி. கோயில் என்னுடையது. கடவுள் தமிழ் கடவுள். கடவுள் வழிபாடு மட்டும் ஏன் சமஸ்கிருதத்தில் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் வழிபாடு செய்ய வேண்டும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் உள்ளது. ஆனால், எந்த மொழியில் அர்ச்சனை செய்வது? அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான தீர்வை இந்த அரசு வழங்கும் என்று நம்புகிறேன் என்றார்.

Exit mobile version