புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது

புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன்படி, 100 யூனிட்கள் வரை இலவச மின்சார வழங்கப்படும். 200 யூனிட் வரை மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ₹72.50, 400 யூனிட் வரை மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ₹147.50, 500 யூனிட் வரை மின் நுகர்வோர்களுக்கு ₹297.50ம் கட்டணம் உயர்த்தப்படும். இதேபோல் 600 யூனிட்கள் வரை மின் நுகர்வோர்களுக்கு ₹155ம் , 2 மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்கள் மின் நுகர்வோர்களுக்கு  மாதம் ஒன்றுக்கு ₹275ம், 800 யூனிட்கள் வரை மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ₹395ம், 900 யூனிட்கள் நுகர்வோர் செய்வோருக்கு ₹565ம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்கள் முதலியவற்றிற்கு கட்டண விலக்கு அளிக்கப்படும். இது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை  ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் எட்டு ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version