ஆயுதபூஜையை முன்னிட்டு ஆவினில் ‘ஸ்வீட் பாக்ஸ்’ அறிமுகம்

ஆயுதபூஜையை முன்னிட்டு ஐந்து வகையான இனிப்புகள் மற்றும் ஒரு கார வகையை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதன்முறையாக, அக்டோபர் 4ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில், நுகர்வோர்களை கவரும் விதமாக, 5 வகையான இனிப்புகள், 1 கார வகையை தயாரித்து விற்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நெய் பாதுஷா 250 கிராம் – ₹190, நட்ஸ் அல்வா 250 கிராம் – ₹190, ஸ்டப்டு மோதி பாக் 250 கிராம் – ₹180, காஜூ பிஸ்தா ரோல் 500 கிராம் – ₹320, காஜூ கத்லி 250 கிராம் – ₹260 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. கலவை இனிப்புகள் அடங்கிய ஸ்வீட் பாக்ஸ் 250 கிராம்- ₹450, மிக்ஸர் 250 கிராம் – ₹100  என விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை ஆவின் நிறுவனம் துவங்கியுள்ளது.

மொத்தமாக, இனிப்பு மற்றும் மிக்ஸர் வாங்குவோருக்கு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையை (அக்டோபர் 24) முன்னிட்டு ₹200 கோடிக்கு இனிப்புகளை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Exit mobile version