ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ராமதாஸ் வாழ்த்து…

மத்திய அரசின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு
இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில், நாகர்கோவில் மாணவர் தேசிய அளவில் 7வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். இந்த நிலையில், குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்காக தேர்வுகளில் வெற்றி பெற்ற 829 பேருக்கும் பா.ம.க. சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகள். குடிமைப்பணி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 44 பேருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த கனேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7-வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், தேசிய அளவில் 47-ஆவது இடத்தையும் பிடித்துள்ள மாணவி ஐஸ்வர்யா, தேசிய அளவில் 36-வது இடத்தை பிடித்துள்ள காரைக்காலைச் சேர்ந்த மாணவி சரண்யா புதுவையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தமிழக அளவில் முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிக்கும், புதுவையில் முதலிடம் பிடித்த மாணவிக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version