பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு இணையத்தில் பதிவு : சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது

சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூப் சேனலில் பதிவிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை:

யூடியூப் சேனல்கள் மூலம் தற்போது பெண்களிடம் பிராங்க், சமையல் ரிவ்யூ, மக்களிடம் கருத்து கேட்டல் என்ற பெயரில் பொது இடங்களில் மக்களிடம் கேள்வி கேட்டு, அதை வைரல் வீடியோவாக்கி வருமானம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், சமீபத்தில் Chennai Talks என்ற யூடியூப் சேனலில் பெண்ணிடம் ஆபாசமாக பேசி எடுத்த பேட்டி யூடியூப் சேனலில் பகிரப்பட்டு தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட வைரலான வீடியோ குறித்து பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர், ‘பொது இடங்களில் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாஸ்திரி நகர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

Read more – தமிழகத்தில் வருகின்ற 19 ம் தேதி முதல் 10, 12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இந்த புகாரின் அடிப்படையில், சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ்குமார், ஒளிப்பதிவாளர் அஜய்பாபு, தொகுப்பாளர் ஆசான் பாட்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாஸ்திரி நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version