முந்துங்கள்… நாளை இந்த 40 இடங்களிலும் பட்டாசு குறைந்த விலைக்கு கிடைக்கும்…!

நாடு முழுவதும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு வரலாற்றுக் காரணம் அந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்து 2 மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ஸ்பெஷலாக புத்தாடைகள் பலகாரங்கள் என பல இருந்தாலும் பட்டாசுதான் பிரதானமாக விளங்குகிறது. பட்டாசு கிரகணம் எப்போது தொடங்கப்படும் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தீவுத்திடலில் வரும் 27-ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனை தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது இதனை தொடர்ந்து கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் பட்டாசு கடைகள் திறப்பது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள் ஆகியவற்றிலும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகள் நாளை முதல் துவக்கப்பட உள்ளன.

சென்னையில் டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், பூங்கா நகர் கூட்டுறவு பண்டக சாலை, வடசென்னை கூட்டுறவு பண்டக சாலை, காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவற்றின் சார்பில் தேனாம்பேட்டை, அண்ணா நகர், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், கீழ்ப்பாக்கம், அசோக்நகர் குரோம்பேட்டை, தாம்பரம் உள்பட 40 இடங்களில் பட்டாசு கடைகள் திறக்கப்பட உள்ளன.

இதில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சார்பில் மட்டும் தேனாம்பேட்டை அண்ணாசாலை, ராஜா அண்ணாமலைபுரம், ராயப்பேட்டை, பெசன்ட்நகர், அடையாறு காந்திநகர், திருவல்லிக்கேணி பெரிய தெரு, மயிலாப்பூர் ஆர்.கே.மடம் பிராடிஸ் ரோடு, சைதாப்பேட்டை பஜார் ரோடு, சாலிகிராமம் ஆற்காடுசாலை, வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் தெரு, நுங்கம்பாக்கம், பெரம்பூர் பெரியார் நகர் கார்த்திகேயன் சாலை ஆகிய இடங்களில் பட்டாசு விற்பனை செய்யும் மையங்கள் திறக்கப்படுகின்றன. இதேபோல் பூங்கா நகர் கூட்டுறவு பண்டக சாலை, வடசென்னை கூட்டுறவு பண்டகசாலை ஆகியவற்றின் சார்பிலும் பட்டாசு கடைகள் திறக்கப்படுகின்றன.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 முதல் 15 பட்டாசு கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கடையில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version