மதுப்பிரியர்களால் அரசிற்கு அதிகரிக்கும் வருவாய்; தமிழகத்தில் ஒரே நாளில் எத்தனை கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது தெரியுமா?

தமிழகத்தில் இன்றும் நாளையும் மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால் நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையாகியுள்ளது.
tasmac1

கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கினால் மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதனை நிரந்தரமாக மூட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, தமிழக அரசிற்கு அதிகளவில் வருவாய் மதுக்கடைகளால் தான் கிடைக்கிறது என அரசு தகவல் தெரிவித்தது. அதற்கேற்றால் போல் விடுமுறை நாட்களுக்கு முந்தைய நாட்களில் மதுக்கடைகளில் பல கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைக்கப்பெறுவது தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அதன்படி சுதந்திர தினமான இன்று மற்றும் நாளை ஞாயிறு என்பதால் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபானங்களை வாங்க நேற்றைக்கே மக்கள் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக அலைமோத தொடங்கிவிட்டன. அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் 55.77 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் மது விற்பனை விபரங்கள்

மதுரை மண்டலத்தில் 56.45 கோடி ரூபாய்

சேலம் மண்டலத்தில் 54.60 கோடி ரூபாய்

கோவை மண்டலத்தில் 49.78 கோடி ரூபாய்

சென்னை மண்டலத்தில் 31.50 கோடி ரூபாய்

Exit mobile version