இந்து கோயில் கட்ட தன் சொந்த நிலத்தைக்கொடுத்த முஸ்லீம் நபர்?

காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் காஞ்சிபுரம் கோயில்பத்து சாலையோரத்தில் முனீஸ்வரன் கோவில் ஒன்றை அப்பகுதி வணங்கி வந்தனர்

நீண்ட காலமாக அந்த மக்கள் சூலத்தை முனீஸ்வரனாக வணங்கி வந்தனர். பிறகு விநாயகர், மரமுனீஸ்வரன், சமுத்திர துர்கை போன்ற கடவுள்களையும் அவர்கள் வணங்கி வந்தனர். அந்த கடவுகள்களுக்கு தனித்தனியாக ஆலயம் எழுப்பவும், பெரிய கோவில் ஒன்றை கட்டவும் முடிவு செய்தனர் அந்த ஊர் மக்கள். அந்த கோவிலை பசுபதி என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார்.

காரைக்காலை சேர்ந்த சின்னத்தம்பி என்ற அப்துல் காதர் இந்த பகுதிக்கு உரிமையாளர் ஆவார். குடியிருப்பு மனைகள் கட்டி விற்பனை செய்ய கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை வாங்கினார். வழிபாடு நடத்திய இடத்தை கோவிலுக்கு வழங்க வேண்டும் என்று அப்துல் காதரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர். இதனை தொடர்ந்து அப்துல் காதரும் கோவிலுக்கு தானமாக தன்னுடைய நிலத்தை தானமாக கொடுக்க சம்மதித்துள்ளார்.

02ம் தேதி கோவில் இருக்கும் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையில் இந்நிலத்திற்கான பத்திரத்தை கோவில் கட்ட வழங்கினார் அப்துல். வழிபாட்டு தலத்திற்கு 1200 சதுர அடி நிலம் இலவசமாக வழங்கியுள்ளார். கோவிலுக்கு அருகே அமைந்திருக்கும் 3000 சதுர அடி நிலத்தை பூங்கா அமைக்க நகராட்சிக்கு கொடுத்துள்ளார் அவர். இதனை முழு மனதுடன் அவர் தானமாக கொடுத்ததாக அவர் அறிவித்துள்ளார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version