சட்டமன்ற தேர்தலில் கமல் போட்டியிடப்போகும் தொகுதி குறித்து வெளியான தகவல்

2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மயிலாப்பூரில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Makkal Needhi Maiam

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் வெற்றிப்பெற தீவிரம் காட்டி வருகின்றனர்.

2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல், 2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக தனது கட்சியினருடன் தீவிரமாக ஆலோசித்து, தயாராகி வருகின்றார்.

இது மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்கொள்ளவிருக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால், மண்டல மற்றும் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் கமல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சென்னையில் அதிக செல்வாக்கு இருப்பதாக தனியார் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ள நிலையில், கமல் மயிலாப்பூரில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version