தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்ற அறிவிப்பால் ஒரே நாளில் லட்ச பேருக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக தகவல்!

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததையத்து நேற்று ஒரே நாளில் 1.20 லட்ச பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்ற அறிவிப்பால் ஒரே நாளில் லட்ச பேருக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா தாக்கம் அதிகரிப்பின் காரணமாக பொதுப் போக்குவரத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் நடைமுறையில் அமலில் இருந்து வருகிறது. இதனால் அவசர தேவைகளுக்கு கூட இ-பாஸ் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் தான் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை தமிழக அரசு எளிதாக்கி அறிவிப்பினை வெளியிட்டது. இதன்படி நேற்று முதல் . விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்றவுடன் ஒரே நாளில் பல்வேறு காரணங்களுக்காக 1.20 லட்சம் விண்ணப்பித்த நிலையில் அனைவரும் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version