உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி ? கோட்டாட்சியர் விசாரணையில் புதிய தகவல்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் முதல் பரிசுக்கான ஆள்மாறாட்டம் நடந்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.

மதுரை :

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கடந்த ஜனவரி 16 ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் பரிசு அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் கண்ணன் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் இரண்டாம் பரிசு வென்ற கருப்பண்ணன் புகார் அளித்தார்.

இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் கோட்டாசியர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்பொழுது நடந்த விசாரணையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்த போது 33 வது எண்ணை கொண்ட ஜெர்சி அணிந்திருந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் காயம் காரணமாக ஆரம்பத்திலேயே களத்திலிருந்து வெளியேறியுள்ளார். அவரது டிசர்ட்டை அணிந்து கண்ணன் என்பவர் தொடர்ந்து காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கண்ணன் பெயர் பதிவு செய்யப்படாமல் களத்தில் இறங்கி தொடர்ச்சியாக காளைகளை அடக்கியுள்ளார். எனவே, முதல் பரிசை யாருக்கு வழங்குவது என்பதை விழா கமிட்டியே முடிவு செய்யும் என்று போட்டியின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read more – 11 ம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி, வேளாண் சட்டங்கள் குறித்து இனி விவசாயிகள் தான் முடிவு எடுக்கவேண்டும் – மத்திய வேளாண் துறை அமைச்சர்

அப்பொழுது, ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் பரிசுகளை அறிவித்தார். முதல் பரிசில் ஆள்மாறாட்டம் நடந்ததாக கூறி அவரை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

Exit mobile version