தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்பு திட்டமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தி தருவதை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக மாவட்டங்கள் தோறும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கவும் இரு வாரத்திற்கு ஒருமுறை கூடி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடெங்கும் கிராமப்புறங்களில் இணைய வசதியை கொண்டு செல்ல பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12,525 கிராமங்களில் இணைய தள வசதி தரப்பட உள்ளது. இதற்காக 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் இணைப்பு தரப்பட உள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தி தரும் இந்த திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள எந்த துறையிடமும் அனுமதி பெறத் தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது