இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? திமுக எம்.பி கனிமொழி ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி விமான நிலையத்திற்கு வந்தபோது பாதுகாப்புக்கு அங்கிருந்த மத்திய தொழிற்படை வீரர் (CISF) சோதனை மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தியில் கேட்டபோது, கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ்தான் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
அதற்கு அந்த CISF வீரர் மீண்டும் நீங்கள் இந்தியர் தானா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தை சுட்டி காண்பித்து ட்வீட் செய்துள்ள கனிமொழி, இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? இந்தி தெரிந்தால் தான் இந்தியர்கள் என்ற முடிவுக்கு எப்போது வந்தீர்கள் என ஆதங்க பதிவாக பதிவிட்டுள்ளார்.
இவ்விவகாரம் இணையவாசிகள் மத்தியில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மத்திய அரசு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையை திணிக்க பார்க்கிறது என்று விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.