மதுரை அலங்காநல்லூரில் ஜனவரி 16 ம் தேதி ஜல்லிக்கட்டு : 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் ஜனவரி 16 ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று மதுரை ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை :

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு தமிழக அரசு கடந்த மாதம் 26 ம் தேதி பல நெறிமுறைகளை அறிவித்து நடத்த அனுமதியளித்தது. இதையடுத்து தற்போது மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடங்கள் மற்றும் தேதிகள் மதுரை ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.

இதன்படி, உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் ஜனவரி 16 ம் தேதியும், அவனியாபுரத்தில் ஜனவரி 14 ம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 15 ம் தேதியும் நடத்த திட்டமிட்டபட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அதிகபட்சமாக 300 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி உண்டு. மேலும், காளை விடும் நிகழ்வின் போது 150 வீரர்கள் மட்டுமே பங்கேற்கவேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டிகளை காண 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என்றும் அந்த கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Read more – பறவைகளையும் தொடரும் மர்ம காய்ச்சல்.. கொத்து கொத்தாய் மடியும் பல உயிர்கள்..

அதனைத்தொடர்ந்து, 50 சதவீத பார்வையாளர்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை எடுக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகள், காளை உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர் ஒருவரும் அனுமதிக்கப்படுவார். அவர்களுக்கும் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்.

ஜல்லிக்கட்டு நடப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பே மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version