பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ராஹரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
பெங்களூரு சிறையில் இருந்து 27ம் தேதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் வெளியே இருந்து மருத்துவ குழுவினர் சென்று பரிசோதித்து வருவதாகவும், பாதிப்பு ஏதுமில்லை எனவும் சிறை மருத்துவர்கள் தரப்பில் வெளியிட்டுள்ளார்கள்.