நடிகர் ரஜினி காந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் : ஜெயகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு நலப்பணி திட்டம்

நடிகர் ரஜினி காந்தின் 70 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜெயகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு நலப்பணி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை:

ரஜினி காந்தின் 70 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தின் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் J. ஜெயகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு நலப்பணிகள் செயல்படுத்தப்பட்டது.

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் கொல்லச்சேரி நால்ரோடு சேக்கிழார் அரசு பள்ளி அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து பம்மல்,குன்றத்தூர்,மற்றும் ஸ்ரீபெரும்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எளிய பெண்களுக்கு சேலை வழங்குதல்,பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு,புத்தகங்கள் மற்றும் மரம் நடும் விழா போன்றவைகளும் வெகுசிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தின் செயலாளர் J ஜெயகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, சிக்கராயபுரம் ,மலையம்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற ரசிகர்களின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டுள்ளது.மேலும் சிறுகளத்தூர் ஊராட்சி டார்ஜீலிங் ஸடோன் பள்ளியில் மதியம் 12.30 மணியளவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு குன்றத்தூர் ஒன்றியம்,பேரூராட்சி,மற்றும் ஊராட்சிகள் நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் ரஜினி மக்கள் மன்ற சார்பில் ரத்ததானம் முகாம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version