பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள் இருந்தவர் கமல் ஹாசன் – அமைச்சர் ஜெயக்குமார்

பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள்ளே இருந்தார் கமல்ஹாசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் .

சென்னை:

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் சந்திப்பில்,பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன். அறிக்கை மூலம் மட்டுமே பேசும் கமல்ஹாசன் அடுத்த பிக்பாஸ்க்கு தயாராகி விட்டார்.

அதனை தொடர்ந்து அவர் தி.மு.க நினைத்திருந்தால் அவர்களது ஆட்சிக்காலத்தில் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம் ஆனால் எதுவும் செய்யவில்லை.மேலும் 17 வருடமாக தமிழகத்திற்கு துரோகம் இழைத்த ஒரே கட்சி தி.மு.க.தான் என்று அவர் கூறினார்.

Exit mobile version