மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரத்தை மதுரையில் இன்று தொடங்குகிறார்.
மதுரை:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் இன்று தொடங்குகிறார்.
கமல்ஹாசன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று 3 பொது கூட்டங்களில் கலந்து கொண்டு அதன் பிறகு இன்று மாலை கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் அமைப்பினர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகளுடன் கமல்ஹாசன் கலந்துரையாடுகிறார்.
Read more – வேளாண் சட்டங்களை ரத்து செய்ய இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர் வேண்டும் ? ராகுல் காந்தி கேள்வி
கமல்ஹாசன் நாளை திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் தெருமுனைக்கூட்டங்களில் பங்கேற்று அதன்பின்னர் டிசம்பர் 15 ம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும், டிசம்பர் 16 ம் தேதி 16-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மீனவர்களை சந்தித்து தனது முதற்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.