அரசியலில் யாரும் என்னை இயக்கவில்லை,என்னை யாராலும் இயக்க முடியாது:கமல்ஹாசன் பேட்டி

அரசியலில் என்னை யாராலும் இயக்க முடியாது என்று நெல்லையில் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

திருநெல்வேலி:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் தென் மாவட்டங்களில் தொடர்ந்து முதற்கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை யாரும் முன்னெடுக்காத அரசியலை நடத்த வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது.நடிகரும்,எனது நண்பருமான ரஜினிகாந்த் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியுடன் சேருவதற்கான நேரம் இல்லை.எங்களது சின்னம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளது.அந்த சின்னத்தினை நியமான முறையில் போராடி வருகிறோம் என்றார்.மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை கொண்டு வருவோம்.

Read more – எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 29 மீனவர்கள் சிறைபிடிப்பு : 18ம் தேதி வரை சிறை காவலில் அடைக்க உத்தரவு

அதனைத்தொடர்ந்து,அரசியலில் யாரும் என்னை இயக்கவில்லை,என்னை யாராலும் இயக்க முடியாது.நல்லவர்கள் எங்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று நம்பிக்கை வைத்துளோம். எம்.ஜி.ஆர். பற்றி நான் இப்போது பேசவில்லை; 40 ஆண்டுகளுக்கு முன்பே பேசியுள்ளேன். போஸ்டரில் எம்.ஜி.ஆர். படத்தை சிறியதாக்கியவர்கள் தான் தற்போது என்னை எதிர்க்கிறார்கள். எம்.ஜி.ஆரை அரசியலுக்காக யார் கையில் எடுக்கிறார்கள் என்பது மக்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றார். தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசும் நேரம் இதுவல்ல’ என்றார்.

Exit mobile version