முதலாளிகளுக்கு ஆதரவாக பட்ஜெட் இருக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
’பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு அரசியல்வாதிகள் பலரும் தங்கள் கருத்துகளை ஆதரித்தும் எதிர்த்தும் தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.