உடல் நோய்த் தடுப்பூசி இன்று.. ஊழல் நோய்க்கு அடுத்த மாதம்.. ஆளும் நோய்க்கு எதிராக ஊசி செலுத்திய கமல்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

சென்னை :

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி கடந்த ஜனவரி 16 ம் தேதி தொடங்கி போடப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு தொடங்கி வைத்தார்.

Read more – ஸ்டாலினுக்கு எதிராக களமிறங்கும் திருநங்கை அப்சரா ரெட்டி : கொளத்தூரில் போட்டியா ?

இதையடுத்து, இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கூறியதாவது; ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version