இளைஞர்கள் முன் சிலம்பம் சுற்றி அசத்திய கமல்ஹாசன்!

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சிலம்பம் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் பல சாதனைகள் புரிந்துள்ளது அனைவர்க்கும் தெரியும். இத்தனைக்கும் காரணம் எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்ளும் திறமைக்கு கொண்டது தான்.

கமல் மிக கடினமாக கலைகளைக் கூட விரைவில் கற்றுக்கொள்ளும் தெளிவு பெற்றவர்.

https://www.facebook.com/nikkilspage/videos/770816627204960/?t=4

தேவர் மகன் படத்தில் கமல், மிகவும் நேர்த்தியாக சிலம்பம் சுற்றுவார். முறையாக பல வருடங்கள் கற்றுக் கொண்டவர்களைப் போலவே அசத்தலான சிலம்பம் சுற்றியிருப்பார்.

தற்போது கமல்ஹாசன் தேவர் மகன் படத்தைப் போலவே சிலம்பம் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் தற்போது வருகின்ற சட்ட மன்ற தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

கோவை தெற்கு தொகுதியில் அவர் வேட்பாளராகக் களமிறங்குகிறார். அதையொட்டி கோவையில் இளைஞர்கள் முன் சிலம்பம் சுற்றியுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version