பாரிமுனையில், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்ததால், வாகனங்கள் இரு வழிபோக்குவரத்துக்கு அனுமதி.
தென்னக இரயில்வே துறை சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்திலுள்ள இரும்பு உத்திரம் ( Replace of Shall types steel girders ) மாற்றியமைக்கும் பணி நடைபெற்றதால், மேற்படி சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்து 14.09.2019 முதல் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.
தற்போது அப்பணிகள் நிறைவு பெற்றதால் மீண்டும் நாளை (06.09.2020) காலை 10.00 மணி முதல் மேற்படி சுரங்கப்பாதையில் வாகனங்களின் இருவழி போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.
1. காமராஜர் சாலையில் இருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் போர் நினைவு சின்னம், தலைமைச் செயலகம் வழியாக இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை சாலையில் செல்லலாம்.
2. இராயபுரம் பாலம், இராஜாஜி சாலையில் இருந்து, காமராஜர் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை சாலையில் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
