தூத்துக்குடியில் கிராம சபை கூட்டம் நடத்திய கனிமொழி, தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:
கிராம சபை கூட்டம்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதியான காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், வேளாண் மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டபடி கிராம சபை கூட்டத்தை நடத்துவோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
வழக்குப்பதிவு :
தூத்துக்குடி, சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளை கிராமத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் கூட்டம் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் தடை உத்தரவை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 300 பேர் மீது தட்டார்மடம் போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.