தமிழக காங்கிரஸ் தலைவரை கைது செய்ய வேண்டும்-கராத்தே தியாகராஜன் வலியுறுத்தல்

கொரோனா தொற்று பரவுவதற்கு காரணமான தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை கைது செய்ய வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

காங்கிரஸ் பொறுப்பாளருக்கு கொரோனா:

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கடந்த வாரம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இதுதொடர்பாக கராத்தே தியாகராஜன் கூறியிருப்பதாவது:-

காரணம் யார்?

தினேஷ் குண்டுராவ் சென்னை விமான நிலையத்தில் இறங்கியபோதே 200-க்கும் மேற்பட்டோர் அவருக்கு சால்வை அணிவித்தனர். சத்தியமூர்த்தி பவனின் ஏ.சி. அரங்கில் நடந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் அவருடன் பங்கேற்றனர். தன் உதவியாளர், ஓட்டுநருக்கு கரோனா இருப்பதாகதினேஷ் குண்டுராவ் அப்போதே காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கூறியுள்ளார்.
இதை பொருட்படுத்தாமல் ஏராளமான தலைவர்கள், நிர்வாகிகளையும் தினேஷ் குண்டுராவை சந்திக்க வைத்துள்ளார் கே..எஸ்.அழகிரி. மு.க.ஸ்டாலினையும் சந்திக்க வைத்துள்ளார்.

அலட்சியம் ஏன்?

தினேஷ் குண்டுராவுக்கு நெருக்கமானவர்களுக்கு கரோனா இருப்பது தெரிந்தும் அழகிரி ஏன் இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டார்?
அவரது அலட்சியத்தாலேயே கடந்த மே 21-ம் தேதி ராஜீவ்காந்தி நினைவு நாள‌ன்று நடத்திய‌கூட்டத்தில் பங்கேற்ற வசந்தகுமார்எம்.பி., பொன்.கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்கை நாராயணன், மோகன்காந்தி உள்ளிட்ட 10 பேருக்குதொற்று ஏற்பட்டது. இந்த அலட்சியத்தால் வசந்தகுமார் போன்றவர்களை இழந்துள்ளோம்.

கைது செய்க:

கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த பிறகும், தனிமைப்படுத்திக்கொள்ளாமல், மக்களின் உயிருடன் விளையாடும் கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுத்து, நோய் தொற்று தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Exit mobile version