திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி எம்எல்ஏ மற்றும் திரைப்பட நடிகரான கருணாசுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா விற்கு அடுத்த படியாக தமிழகத்திதான் கொரோனா நோயின் பரவல் அதிகமாக உள்ளது இந்த நோய் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு களத்தில் வேலை செய்து வரும் அமைச்சர்கள், மருத்துவர்கள், போலீசார், துப்புரவு பணிசெய்பவர்கள், செய்தியாளர்கள் தீயணைப்புத்துறையினர் என அனைவரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் சேப்பாக்கம் MLA வான கே. அன்பழகன் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார். மேலும் அமைச்சர்கள் செல்லூர் ராஜீ, கே. பி. அன்பழகன் ஆகியோர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு குணம் அடைந்தனர்.
இந்தநிலையில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி எம்எல்ஏ மற்றும் திரைப்பட நடிகரான கருணாசுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தற்போது கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சையெடுத்து வருகிறார்.