தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவிற்கு ஆதரவு அளிப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை:
சாதி வாரிய கணக்கெடுப்பு மற்றும் 20 % இடஒதுக்கீடு வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பாமக வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் குறித்து அன்புமணி ராமதாஸிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி அதில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதனை தொடர்ந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் வரவேற்பதாக கருணாஸ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:தமிழக அரசு உறுதியளித்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.மத்திய அரசு கொண்டுவந்த சீர்மரபினர் கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் உடனடியாக நடத்தக்கோரியும்,68 சமுதாய மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தேன்.இந்த ஆணையம் விரைவாக செயல்பட்டு அனைத்து சமுதாய மக்களின் நலனை பாதுகாத்திட வேண்டும் என்று இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.