52 வயதான ஒரு பெண், தமிழக அரசின் வேலைவாய்ப்பைப் பெற உதவுவதாகக் கூறி பலரை ஏமாற்றியதாகவும், சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரூ 50 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சென்னை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் டி. ஜமுனாதேவி, இவர் நீலாங்கரை அருகிலுள்ள அக்கரைச் சேர்ந்தவர்.அவர் எல்லோரிடமும் எனக்கு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தொடர்பு இருக்கிறது ,அவர்கள் மூலமாக உங்களுக்கு எளிதாக வேலை வாங்கித் தர உதவ முடியும் என்று பலரை அவர் ஏமாற்றி வந்துள்ளார்.
ஜமுனாதேவி, இந்த புகார் குறித்து அறிந்ததால் ஓடி ஒளிந்து கொண்டார் நீலாங்கரை போலீசார் பின்பு அவரின் மறைவிடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர்.பெண் என்பதால் குற்றச்சாட்டு குறித்து புகார் அளித்தவர்களிடமும் இதில் தொடர்பு உடையவர்கள் இடமும் பலமுறை விசாரித்து அதன் பிறகே இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.
எஸ்.சரவணன் என்பவர் கொடுத்த புகாரில், மாநில அரசுத் துறையில் தனது மனைவிக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்து அந்த பெண் தன்னை ரூ .12 லட்சம் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார்.
தற்போது பெண் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
” இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்தப் பெண் மற்ற மாநிலங்களிலும் இதேபோல் செயல்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இங்குள்ள சிலர் அவருக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு தயாராக உள்ளனர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி மேற்கோளிட்டுள்ளார்.
அரசுத் துறைகளில் வேலை உறுதி அளிக்கும் நபர்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இத்தகைய மோசடிகள் ஒன்றும் புதிதல்ல, ஆனால் இன்னும் இதுபோன்ற மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் மக்கள். கண்மூடித்தனமாக பணம் செலுத்துவதற்கு முன்பு சற்றே சிந்திக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள் .