தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் பயிற்சியில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த உதவித்தொகை வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகாலம் வரை வழங்கப்படும். படிப்பை முடித்து தொடக்க காலத்தில் மிகவும் சிரமப்படும் வழக்கறிஞர்களுக்கு, இந்த உதவித்தொகை மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.