தமிழகத்தில் அடுத்த ஆட்சி திமுக தான்.. கருத்து கணிப்பில் வெளியான முடிவுகள்..

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்பில் திமுக தான் ஆட்சியமைக்க உள்ளதாக பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடந்த சட்டமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 29 ம் தேதிக்கு முன்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவும், அதன் முடிவுகளை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி போன்ற முக்கியமான ஊடகங்களில் வெளியிட தடைவிதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், வரும் மே 2 ம் தேதி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் திமுக தொகுதி 133 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், அதிமுக 68 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read more – இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் : திரையுலகினர் அதிர்ச்சி

இந்தியாவில் உள்ள பிரபல செய்தி நிறுவனங்களான ரிபப்ளிக் டிவி, இந்தியா டுடே, உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அந்த கருத்து கணிப்பிலும் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Exit mobile version