தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை : புத்தாண்டு கொண்டாட்டம்

ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை :

தமிழகத்தில் கொரொனா கால ஊரடங்கு வரும் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை ஏற்கனவே உள்ள சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் இல்லை.

இந்தநிலையில் சமீபத்தில் தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறக்க உத்தர விட்டது. இன்று புத்தாண்டு புத்தாண்டையொட்டி  நேற்று தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் அமோகமாக மது விற்பனையாகியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரேநாளில் மட்டும் இந்தக் கொரொனா காலத்திலும் கூட ரூ.159 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. 

Read more – அமெரிக்காவில் எச்-1பி விசா தடை நீட்டிப்பு : டிரம்ப் உத்தரவு

சென்னை மண்டலத்தில் ரு.48 .75 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.28.40 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ. 28.10 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ,27.30 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ. 26.49 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version