தயார்நிலையில் புறநகர்மின்சார ரயில் சேவை!!

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு  உள்ளது.  இதில்பஸ், ரெயில் போக்குவரத்தை மாநிலத்துக்குள் இயக்க  தமிழகஅரசு  ஏற்கனவேஅனுமதி  தந்துள்ளது.

இதன்படி  தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து தற்போது செயல்பட்டு வருகிறது. இன்று முதல் தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்கள் தொடங்கப்படுகிறது.

இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகவும் முக்கிய முக்கிய  மற்றும்  ஏழைகளின் பயன்பாடாக எப்பொழுதும் உள்ள மின்சார ரெயில் சேவையை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்என்று  மக்கள்கோரிக்கை விடுத்து  உள்ளார்கள்.

தற்போது இது  சம்பந்தமாக தெற்கு ரெயில்வே  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

 மீண்டும்மின்சார ரெயில் சேவையை தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்க ரெயில்வே வாரியத்துக்கு கோரிக்கை  மடல் அனுப்பி உள்ளார்கள்.. இதனால்விரைவில் சென்னையில் புறநகர் மின்சார ரெயில் சேவை   ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ரெயில்வே வாரியம் ஒப்புதல் பெற்ற பிறகு முதல்  கட்ட முயற்சியாக  சற்று குறைந்த அளவில் மின்சார ரெயில்கள் இயக்க  திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

 எனவே, ரெயில் போக்குவரத்து வசதியை  தற்போது தமிழகத்துக்குள் தொடங்க  உத்தரவு தரப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரெயில் சேவை மீண்டும்   ஆரம்பமாவது குறித்து ரெயில்வே வாரியத்துக்கு கோரிக்கை  தந்திருக்கிறோம்.

ரெயில்வே வாரிய அனுமதி கிடைத்த பிறகு விரைவில் மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கும். இன்னும் ஒரு சில  நாட்களில்இதற்கான பதில்  கிடைக்கப்பெறும் என  காத்திருக்கிறோம்

மின்சார ரெயில்களை இயக்குவதற்கு  ஏதுவாக தயார் நிலையிலேயே இருக்கிறோம்.    தற்போது மின்சார ரெயில்களில் தூய்மை மற்றும்  தேவையானபராமரிப்புப் பணிகள்  அனைத்தும் செயல்படுத்தப்பட்டு  வருகிறது. ரெயில்வே வாரியத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு  உடனே தயார் நிலையில் இருக்கும்மின்சார ரெயில்கள்  தொடங்கப்படும்.

இவ்வாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Exit mobile version