அதிமுகவில் ஏதாவது நடந்துவிடாதா என்று மு.க. ஸ்டாலின் எதிர்பார்க்கிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை :
மதுரை மாகூப்பாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் பணி நடைபெற்றது. மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய பிறகு விழாவில் பேசிய செல்லூர் ராஜு கூறியதாவது ;
மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 23 ஆயிரம் மாணவ – மாணவியிருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார். தி.மு.க தலைவர் ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் ஆக வேண்டும் என்று நினைத்து வருகிறார். இப்பொழுதே முதல்வர் ஆகிவிட்டது போல ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார். ஸ்டாலின் ஏற்கனவே துணை முதல்வராக இருந்த போது தமிழக மக்களுக்கு ஏன் எந்த திட்டங்களையும் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களோடு மக்களாக இருப்பது ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் தான் என்னவோ அதிமுகவில் ஏதாவது நடந்துவிடாதா என்று தெரிவித்துள்ளார்.