மதுரை அரசு பொது மருத்துவமனை கொரோனா வார்டில் எலி தொல்லை அதிகம் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் முக்கிய இடங்களான ராஜாஜி மருத்துவமனை, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய இடங்களில் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டில் இயங்கி வரும் ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் எலி தொல்லைகள் அதிகம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், தங்களுக்கு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் மீது எலி வாய் வைக்கப்பதாகவும், கொரோனா தொற்றை தொடர்ந்து ரேபிஸ் நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகின்றனர்.
Read more – டெல்லியில் 6 நாள் ஊரடங்கு எதிரொலி… மது வாங்க டாஸ்மாக்கில் அடிதடி…
ஏற்கனவே, அந்த மையத்தில் வெப்பம் சலனம் மற்றும் கொசுக்கடி தொல்லைகளை தொடர்ந்து தற்போது எலி தொல்லைகளும் உள்ளது என்கிறார்கள். இதுகுறித்து அந்த மருத்துவமனை டீன் சங்குமணி அப்படி எந்தவொரு தொல்லையும் இல்லை என்று மறுத்துள்ளார்.