புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமியை ராஜா என்ற பூக்கடைக்காரர் பலாத்காரம் செய்து பின்னர் சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று கண்மாயில் உள்ள புதரில் வீசய கொடூர சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. போலீசார் தீவிர விசாரண நடத்தி ராஜாவை கைது செய்தனர்.

இதையடுத்து 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Read more – டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வைஃபை வசதி : ஆம் ஆத்மி கட்சியினர் அதிரடி அறிவிப்பு

இந்நிலையில்  7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது

Exit mobile version