கேரளாவில் மாவோயிஸ்ட்டுக்கள் கைது… தமிழக மருத்துவர் வீட்டில் தீவிர சோதனை!!

கேரளாவில் மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக-கேரள ஆந்திர மாநிலங்களில் அவருக்கு தொடர்புடைய 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என அறியப்படும் புலியகுளம் பகுதியில் உள்ள மருத்துவர் தினேஷ் என்பவரது வீட்டிலும், சுங்கம் பகுதியிலுள்ள டேனிஷ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல பொள்ளாச்சி அடுத்த அங்கலங்குறிச்சி பகுதியிலுள்ள சந்தோஷ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனை இடைவிடாது நடைபெற்று வருகிறது.

Exit mobile version