தாம்பத்திய குறைபாட்டை மறைத்து திருமணம் – அமெரிக்க மாப்பிள்ளை கைது

தாம்பத்திய குறைபாட்டை மறைத்து பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த அமெரிக்க மாப்பிள்ளை சென்னையில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த வசந்தன் என்பவரும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது  50 சவரன் நகை, 50,000 அமெரிக்க டாலரை வரதட்சணையாக பெற்றுள்ளார் வசந்தன். அத்துடன் 3 கிலோ வெள்ளி, திருமண செலவு  20 லட்சம் என பெண் வீட்டாரிடம் தாறுமாறாக வசூலித்து இருக்கிறார்.

திருமணம் முடிந்து மனைவியை அமெரிக்கா அழைத்து சென்ற வசந்தன் அவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் தொடர்ந்து தட்டிக் கழித்து வந்துள்ளார். அதன் பிறகே அவருக்கு தாம்பத்தியத்தில் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. திருமணத்திற்கு முன் இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்துக் கொண்டுள்ளார். இதையெல்லாம் மறைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் வசந்தன். இதுகுறித்து சென்னையில் வசித்து வரும் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர். அதன் பேரில் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த வசந்தனை திருவல்லிக்கேணி போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்து இருக்கின்றனர்.

Exit mobile version