கொரோனா தடுப்பு நடைமுறையை கடைப்பிடிக்காமல் இருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என பொது சுகாதார சட்டத்தில் திருத்தம்மேற்கொண்டதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இன்னும் குறைந்தபாடில்லை. இதில் தமிழகத்திலும் சீரான நிலையிலேயே அதிகமாகி கொண்டிருக்கிறது. அப்போது பல்வேறு தளர்வுகள் கொடுத்துள்ளதால், மக்கள் வெளியில் வரும் போது முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், மற்றும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவும் வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. இதை பெரும்பாலான ஆட்கள் காது கொடுத்து கேட்பதில்லை.
இதனால், தற்போது இதனை சட்டமாக கொண்டு வந்து அபராதம் விதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி தமிழக அரசின் பொது சுகாதார சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வந்தது தமிழக அரசு. இதில், மேற்கொள்ளப்பட்ட அவசர சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு கொடுத்துள்ளார்.
இந்த சட்டத்தின் மூலம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க முடியும்.