தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை:
தமிழறிஞர் வீரமாமுனிவரின் 340வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
கூட்டணி ஆட்சியா?
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுகிற நிலையில், கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள். அந்த நிலைதான் 2021ல் வரும்.இதுவரையில் இல்லாத அளவுக்கு அ.தி.மு.க. சரித்திரத்தில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும். கூட்டணி என்ற பேச்சுக்குத் தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள் என்று இவ்வாறு அவர் கூறினார்.